"சூப்பர்ஸ்டார் ரஜினி கூட CASUAL மீட்டிங்".. நடிகை குஷ்புவின் வைரல் கேப்ஷன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

Advertising
>
Advertising

ரஜினி, கமல், விஜய், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பு, தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சதிஷ், சூரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், நடிகை குஷ்புவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தில் குஷ்பு நடித்துள்ளதும் உறுதியாகி உள்ளது. இயக்குனர் சுந்தர். சியை திருமணம் செய்து கொண்ட குஷ்பு, அவருடன் இணைந்து திரைப்படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் குஷ்பு.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை குஷ்பு, சூப்பர்ஸ்டாருடன் ஒரு கேஷுவல் மீட்டிங் என்றும் டீ மற்றும் சிரிப்புடன் அந்த தருணம் அதிகம் மகிழ்ச்சியை தருகிறது என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். மேலும், பொன்னான நேரத்திற்கு ரஜினிக்கு நன்றி சொன்ன குஷ்பு, அவர் அமேசிங்காக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தை குஷ்பு சந்தித்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Khushbu meets rajinikanth shares pic in twitter

People looking for online information on Khushbu, Rajinikanth will find this news story useful.