வந்தாச்சு பிரபல நிகழ்ச்சியின் 2வது சீசன்!.. நடுவர்களாக பிரபல நடிகையும் நடன மாஸ்டரும்! PROMO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

அந்தவகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் பற்றிய தகவல் தற்போது பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள டீசர், “வேற லெவல் ஆட்டம் வெறித்தனமாக களைகட்டும் .. இனிமேதான் ஆட்டம் களைகட்ட போகிறது!” என்கிற கேப்ஷனுடன் பகிரப்பட்டுள்ளது.

இதில் பிரபல நடன மாஸ்டர் பிருந்தா தோன்றி இன்னொரு நடுவரை அழைக்கவிருப்பதாக கூறுகிறார். அவர் வேறு யாருமல்ல.. பிரபல நடிகை, தயாரிப்பாளர், நடனத்தில் எப்போதும் கலக்கக்கூடியவரான குஷ்புதான்.

ஆம், பின்னர் மாஸ் என்ட்ரி கொடுக்கும் குஷ்பு, பிருந்தா மாஸ்டருடன் இணைந்து டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 பற்றிய தகவல்களை தெரிவிக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சி விரைவில் கலர்ஸ்-தமிழ் டிவி சேனலில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அப்படி போடு!! வசந்தபாலனின் புதிய படத்தில் வில்லியாக நடிக்கும் பிரபல BiggBoss தமிழ் நடிகை!

தொடர்புடைய இணைப்புகள்

Khushboo and Brindha master Dance Vs Dance Colors Tamil Promo

People looking for online information on Biggbosstamil, Brindha, KhushbooColorsTamil, Trending, TVActress, TVSerial will find this news story useful.