நம்ம KGF ராக்கி பாயா இது? தனது குழந்தைகளுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்த யஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யாஷ் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் கார்த்தி.. வெளியான சந்திப்பின் பின்னணி தகவல்!

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யாஷ் மாறியுள்ளார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.

தமிழ் நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப் -2  படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

யாஷ், கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகை ராதிகா பண்டித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐரா என்ற மகளும், யாதர்வ் என்ற மகனும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் யாஷ், அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொள்வார். சுற்றுலா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் அடங்கும்.

இந்நிலையில் தற்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | எதிர்பார்ப்பை எகிறவைக்கும் COMBO.. பிரபல இளம் இயக்குனருடன் கைகோர்க்கும் மோகன்லால்!

தொடர்புடைய இணைப்புகள்

KGF Yash celebrate diwali with his wife and Children

People looking for online information on Diwali, KGF Yash, KGF Yash celebrate diwali, Yash will find this news story useful.