GET READY… வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம்…. KGF தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட EXCITING UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே நிறுவனம் தங்களது அடுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | முதல்வர் ஸ்டாலினோடு சந்திப்பு… நெகிழ்ச்சியான கோரிக்கை வைத்த விவேக் மனைவி! வைரல் pics

ஹோம்பாலே பிலிம்ஸ்…

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது. இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் நான்கு நாட்களில் 546 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் 1 & 2 படங்களின் மூலம் ஹோம்பாலே நிறுவனம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது.

சலார் & சுதா கொங்கரா திரைப்படம்…

KGF 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்த படமும் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இதையடுத்து தற்போது அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க ’இறுதிச் சுற்று’ மற்றும் ’சூரரைப் போற்று’ திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தைப் பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம்…

இந்நிலையில் தற்போது அடுத்து ஒரு சூப்பர் எக்ஸைட்டிங் அப்டேட்டை ஹோம்பலே நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “நாளை காலை 9.50 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு. வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம் பற்றிய அறிவிப்பு.” எனக் கூறி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார். எந்தவொரு மேலதிக தகவலும் இல்லாததால் கேஜிஎஃப் 3 அறிவிப்பா அல்லது வேறு ஏதேனும் பட அறிவிப்பா என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். இந்த அறிவிப்பு சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் இப்போது வைரலாகியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

GET READY… வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம்…. KGF தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட EXCITING UPDATE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KGF production company exciting update new announcement

People looking for online information on KGF Chapter 2 Movie, KGF production company, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.