பிருத்வி ராஜ் இயக்க KGF தயாரிப்பாளர் தயாரிக்கும் அடுத்த PAN INDIA படம்! வெளிவந்த தெறியான FIRST LOOK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்களூர்: பிருத்வி ராஜ் - KGF தயாரிப்பாளர்கள் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பும் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | BREAKING: வெங்கட் பிரபு படத்திற்கு இளையராஜா இசையா? கூட இந்த இசையமைப்பாளர் வேறயா! ஆஹா

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியானது.

'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. பின் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஹோம்பாலே பிலிம்ஸ் ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தை தயாரித்தது.

தற்போது பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தை தயாரிக்கிறது. சில நாட்களுக்கு முன் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தை அறிவித்தது. இந்நிலையில் லூசிபர் படத்தை இயக்கிய பிரபல நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் புதிய PAN INDIA படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு டைசன் என பெயரிடப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பித்து 2024 ஆம் ஆண்டு ரிலீசாக உள்ளது. IAS அதிகாரிகள் பற்றிய கதை போல் முதல் லுக் அமைந்துள்ளது. இந்த படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பிருத்வி ராஜ் நடிக்கிறார். இந்நிறுவனம் தயாரிக்கும் சலார் படத்திலும் பிருத்வி ராஜ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேரளாவில் பிருத்வி ராஜ் தான் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்தது.

Also Read | DON ஜெயம் ரவி.. POLICE பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? கொலமாஸ் டீசர்!

KGF Producer Next Pan India Film Prithvi Raj Tyson Movie First Look

People looking for online information on KGF Producer, Pan india film, Prithvi Raj, Tyson, Tyson Movie First Look will find this news story useful.