KGF படத்தைத் தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
Also Read | பிரபு சாலமன் & CWC அஸ்வின் கூட்டணியில் புதிய படம்… வித்தியாசமான title & ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!
பேன் இந்திய திரைப்படங்கள்…
சமீபகாலமாக இந்தியா முழுவதும் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆகும் பேன் இந்தியா திரைப்படங்கள் தென்னிந்தியாவில் இருந்து உருவாகி வருகின்றன. அப்படி உருவான பாகுபலி1, பாகுபலி 2, கேஜிஎஃப்1. கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அதையடுத்து இப்போது இந்தியா முழுவதும் ரிலீஸாகும் படங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன. தற்போது கேஜிஎஃப் படங்களைத் தயாரித்த ‘ஹோம்பலே பிலிம்ஸ்’ இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது. அடுதடுத்தடுத்து தங்கள் படங்களை அறிவித்து வருகிறது.
ஹோம்பலே பிலிம்ஸ்…
'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் பிரபாஸ் கதாநாயகான நடிக்கும் ’சலார் ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தையும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரபாஸுடன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இதுபோலவே கன்னட சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான ராஜ்குமாரின் பேரன் யுவராஜ்குமார் அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறது. மேலும் சுதா கொங்கரா இயக்கவுள்ள அடுத்த படத்தையும் தயாரிக்கின்றனர்.
பஹீரா பூஜை…
இந்நிலையில் தற்போது ‘பஹீரா’ என்ற படத்தை அறிவித்து அதன் பூஜையை இன்று நடத்தியுள்ளனர். இந்த படத்துக்கு கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் கதை எழுத, சூரி இயக்குகிறார். ஸ்ரீ முரளி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீ முரளி – பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவான உக்ரம் திரைப்படம் கவனத்தைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. அதையடுத்து இப்போது இந்த கூட்டணி இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8