பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட 'கேஜிஎஃப்' பட இயக்குநரின் 'சலார்'!.. வெளியான ‘முக்கிய’ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜி.எஃப் இயக்குநருடன் பிரபாஸ் இணையும் 'சலார்' திரைக்கு வருவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படம் மூலம் உலகெங்கும் பிரபலமான நடிகர் பிரபாஸ் கே.ஜி.எஃப் படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’எனப் பெயரிடப்பட்ட பன்மொழித் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை அந்தப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இப்போது அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அந்த ட்விட்டர் பதிவில்,  “வரும் 2022 ஏப்ரல் 14-ஆம் தேதி சலார் திரைப்படம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது.

சலார் திரைப்படத்தை உங்களுடன் கொண்டாடும் இந்த தருணத்துக்காக எங்களாலும் காத்திருக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

KGF Directors Salaar Starred Prabhas சலார் பிரபாஸ் கே.ஜி.எஃப்

People looking for online information on Prabhas, Prashanthneel, Salaar will find this news story useful.