"மிரட்டுது நண்பா"... BEAST TRAILER-ஐ பாராட்டிய KGF 2 இயக்குனர்! ரசிகர்கள் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் டிரெய்லரை பாரட்டி KGF இயக்குனர் டிவீட் செய்துள்ளார்.

KGF Director Prashanth Neel Tweet about Beast Trailer
Advertising
>
Advertising

சில நாட்களுக்கு முன் KGF 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அளிவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

KGF Director Prashanth Neel Tweet about Beast Trailer

அதனை முன்னிட்டு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் கேஜிஎப் 2 பட டிரெய்லரை பாராட்டினார். டிரெய்லர் குறித்த டிவிட்டில் "இது பிரமாண்டமாகவும் வெளிச்சமாகவும் இருக்கிறது 🔥🔥 படத்தை பார்க்க காத்திருக்க முடியாது KGF Chapter2 Trailer" என டிவீட் செய்தார்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியானது, பீஸ்ட் டிரெய்லரை பார்த்துவிட்டு இயக்குனர் பிரசாந்த் நீல் ட்வீட் செய்துள்ளார்.  அதில், ஆஹா! முன்னெப்போதையும் விட நன்றாக இருக்கிறது. டிரெய்லர் ஆச்சரியமாக இருக்கிறது நெல்சன். நடிகர் விஜய் சும்மா தெறி" என டிவீட் செய்துள்ளார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Director Prashanth Neel Tweet about Beast Trailer

People looking for online information on Beast, KGF, KGF 2 Trailer, KGF Chapter 2, Vijay will find this news story useful.