KGF - 3 படத்தில் ஹீரோயின் இவங்களா? ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முன்னணி நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF Chapter 3, படத்தில் ஹீரோயினாக நடிப்பது குறித்து ரசிகரின் கேள்விக்கு பிரபல நடிகை பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "K.G.F" தயாரிப்பாளர் & சுதா கொங்கரா இணையும் புதிய படம்.. ஹீரோ இந்த தமிழ் நடிகரா? சம்பவம் இருக்கு

ஹோம்பாலே பிலிம்ஸ்  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.

இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் மொத்த வசூலாக ஈட்டியது. 100 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கடந்தது. 

இந்த படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் துவங்க உள்ளது. இரண்டாம் பாகம் முடிவடையும் போது மூன்றாவது பாகத்திற்கு அடித்தளமாக படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ஶ்ரீநிதி ஷெட்டி (ரீனா) இறப்பது போல படத்தில் காட்சி அமைந்திருக்கும். 

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிப்பீர்களா? ரீனா கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தில் வேண்டும் " என கேட்டிருந்தார்.  இதற்கு பதில் அளித்த, ஶ்ரீநிதி ஷெட்டி,  "இதற்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை. இதற்கான விடை ஒருவருக்கு மட்டுமே தெரியும். அவர்தான் பிரசாந்த் நீல்!" என பதில் அளித்துள்ளார்.

Also Read | இதுவரை காணாத KGF Chapter 2 படத்தின் BTS.. ஶ்ரீநிதி ஷெட்டி வெளியிட்ட COLOURFUL PHOTO!

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 3 Srinidhi Shetty to Pairing with Rocky Bhai as Reena

People looking for online information on KGF Chapter 2, KGF Chapter 3, Rocky Bhai, Srinidhi Shetty will find this news story useful.