இதுவரை காணாத KGF CHAPTER 2 படத்தின் BTS.. ஶ்ரீநிதி ஷெட்டி வெளியிட்ட COLOURFUL PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ஶ்ரீ நிதி ஷெட்டி, KGF Chapter 2 படத்தின் இதுவரை காணாத BTS ஃபோட்டோவை  வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "K.G.F" தயாரிப்பாளர் & சுதா கொங்கரா இணையும் புதிய படம்.. ஹீரோ இந்த தமிழ் நடிகரா? சம்பவம் இருக்கு

துளு நாட்டை சேர்ந்த நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி சமீபத்தில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்திருந்தார்.

மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இவர் யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இந்த ஆண்டு வெளிவந்த  KGF Chapter 2 படத்தின் மூலம் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 1200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் KGF Chapter 2 படத்தின் இதுவரை காணாத தனது BTS புகைப்படத்தை அப்லோடு செய்துள்ளார். சிவப்பு நிற உடையில் இந்த போட்டோவில் ஶ்ரீநிதி ஷெட்டி தோன்றியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகின்றது.

Also Read | அருள்நிதி நடிக்கும் டிமான்ட்டி காலனி - 2.. ஹீரோயின் இந்த பிரபல நடிகையா? செம்ம ஜோடி!

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Unseen BTS Image of Srinidhi Shetty

People looking for online information on KGF Chapter 2, KGF Chapter 2 Srinidhi Shetty, Shrini, Srinidhi Shetty will find this news story useful.