பிரபல தமிழ் TV KGF Chapter 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

Also Read | ராம் சரண் நடிக்கும் RC15.. ஷூட்டிங் எப்போ? எந்த ஊர்ல? ஷங்கர் கொடுத்த அதிரடி அப்டேட்!
ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’.
இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
புவன் கௌடா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.
தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் மொத்த வசூலாக ஈட்டியது. 100 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கடந்தது.
இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஜி குரூப் நிறுவனம் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த படம் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | ஷாருக்கான் & தீபிகா படுகோன் நடிக்கும் 'பதான்'.. தெறியான ஜான் ஆபிரகாம் கேரக்டர் லுக் போஸ்டர்!