VIDEO: KGF CHAPTER 2.. தீரா தீரா சுல்தானா..! தெறி மாஸான அடுத்த சிங்கிள் எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே ஜி எப் சாப்டர் - 2 படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ராம் - நிவின் பாலி இணையும் புதிய படம்.. BTS போட்டோவோடு வெளியான ஜோரான ஷூட்டிங் அப்டேட்!

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.
கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நாளை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தீரா தீரா தீரா சுல்தானா என்ற இந்த சிங்கிள் பாடல் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் இதே இசையில் வேற வரிகளில் இந்த பாடல் இடம்பெற்றிருந்தது.

புதிய வரிகளை கொண்டு இந்த புதிய பாடல் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்துவதுடன் புல்லரிக்கச் செய்கிறது.

பாடலாசிரியர் மதுரகவி இந்த பாடலை எழுதி இருக்கிறார்.

ராக்கி பாய் என்ட்ரி.. செதறு.. செதறு.. வெளியான கொல மாஸ் KGF Chapter 2 முன்னோட்ட வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

KGf chapter 2 sulthana single lyrical video released

People looking for online information on KGF Chapter 2, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.