தீ ஸ்பீடில் KGF CHAPTER -2... உலகம் முழுவதும் இம்புட்டு தியேட்டர்ல ரிலீஸா? வெளியான சூப்பர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF Chapter 2 படத்தின் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ள திரையரங்குகள் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | இவர் கூட ஒரு படம் பண்ணனும்னு ஆசை.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்! யார் அந்த இயக்குனர்?

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் இன்று  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் KGF Chapter 2 சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு ரிலீசாகி உள்ளது. கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீசாகி உள்ளது.

Also Read | முதல் நாள்லயே தமிழ்நாட்டு தியேட்டர்கள்ல மாஸ் காட்டிய KGF Chapter 2.. இது வேற லெவல் மாஸ்! செம்ம தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Movie World Wide Theatre Screen Count Details

People looking for online information on KGF Chapter 2, KGF Chapter 2 Movie Release, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.