ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'கே ஜி எஃப் சாப்டர் 2’ திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.
இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். யாஷ்க்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார்.
இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது.
இந்த படம் தென்னிந்திய மொழிகளில் வட அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு மூலம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (7 கோடி ரூபாய்) வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இரண்டு நாளில் இந்த படம் 2 மில்லியன் டாலர்களை தற்போது அமெரிக்க டாலர்களை (14 கோடி ரூபாய்) வசூலித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.