புகழ் பெற்ற KGF தாத்தா.. கன்னட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் & கேஜிஎஃப் - 2 புகழ் நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.

Advertising
>
Advertising

கடந்த சில நாட்களாக  உடல் நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடி வந்தவர். இறுதியாக இன்று புதன்கிழமை மரணமடைந்தார்.

கிருஷ்ணா ஜி ராவ் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு சீதா சர்க்கிள் அருகே உள்ள விநாயக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையிலேயே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு கன்னட திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த பல வருடங்களாக கன்னட மொழி சினிமாவில் பணியாற்றிய  70 வயதான கிருஷ்ணா ஜி ராவ் KGF முதல் பாகத்தில்  கண் பார்வையற்ற முதியவராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், இந்த படத்திற்கு பிறகு அவர் சுமார் 30 படங்களில் நடித்தார். 40க்கும் மேற்பட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நானோ நாராயணப்பா படத்தில் டைடடில் ரோலில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே கிருஷ்ணா மறைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புகழ் பெற்ற KGF தாத்தா.. கன்னட நடிகர் கிருஷ்ணா ஜி ராவ் மரணம்.. ரசிகர்கள் இரங்கல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Kannada Actor Krishna G Rao Passed away

People looking for online information on KGF, KGF Chapter 2, Krishna G Rao will find this news story useful.