கேஜிஎப் 2 படத்தின் இரண்டாவது பாடலான அகிலம் நீ நாளை மதியம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேன் இந்தியா கேஜிஎப்…
கன்னட சினிமாவை இந்தியா சினிமாவே திரும்பி பார்க்க வைத்த படம் கேஜிஎப் என்று சொன்னால் அது மிகையில்லை. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கர்நாடகாவின் அடையாளங்களில் ஒன்றான கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த திரைப்படம் பல மொழிகளில் ரிலீஸாகி ஹிட்டானது. தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னர் ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
Most waiting ரிலீஸ்…
முதல் பாகத்தின் வெற்றியால் இப்போது அதிக பிரம்மாண்டமாக கேஜிஎப் 2 உருவாகியுள்ளது. இந்த படத்தில் யாஷுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டரகள் அன்பறிவ் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் இல்லாத சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் ஆகியோர் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். இந்த படம் பேன் இந்தியா ரிலீஸாக ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.
முதல் சிங்கிள் TOOFAN…
ஏற்கனவே இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாகி அதுவும் கவனத்தை ஈர்த்தது. மேலும் இரு தினங்களுக்கு முன்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎப் 2 டிரைலர் 5 மொழிகளில் வெளியாகி ஒரே நாளில் 100 மில்லியன் பேருக்கும் மேல் பார்க்கப்பட்டு வ்வைரல் ஹிட் ஆகியுள்ளது.
அகிலம் நீ அம்மா பாட்டு…
இந்நிலையில் தற்போது கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள அடுத்த சிங்கிள் பாடலான ”அகிலம் நீ” நாளை மதியம் ஒரு மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக அம்மா செண்டின்மெண்ட் காட்சிகளும் படத்தை நகர்த்தி செல்லும் விதமாக உருவாக்கப்பட்டு இருந்தன. கேஜிஎப் 2 டிரைலரிலும் அம்மா செண்ட்டிமெண்ட் காட்சிகள் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமாக படக்குழுவினர் வெளியிட்ட போஸ்ட இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.