கேஜிஎப் 1 மற்றும் 2 ஆகிய படங்களின் மூலம் அறியப்பட்ட நடிகையாகியுள்ளார் ஸ்ரீநிதி ஷெட்டி.
வசூல் வேட்டை…
ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசானது. ரிலீஸானது முதல் இப்போது வரை வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் நான்கு நாட்களில் 546 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட இந்தியாவில் இமாலய வெற்றி…
கேஜிஎப் 2 திரைப்படம் பாகுபலி 2 மற்றும் RRR படங்களைப் போலவே வசூலில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. வெளியானது முதலே அங்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்து படத்தைப் பார்த்து வருகின்றன. இன்று ரிலீஸாகி மூன்றாவது வாரத்தைக் கடந்துள்ள நிலையில் இதுவரையில் மிகப்பெரிய அளவில் வட இந்தியாவில் மட்டும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியில் வெளியான ‘all time blockbuster’ படங்களில் ஒன்றாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த வாரமும் இந்த படம் நல்ல வசூல் தரும் என சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தி படங்கள் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றன. இப்போது அது போல தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருவது குறிப்பிடத்தகக்து.
இயக்குனரைப் புகழ்ந்த ஸ்ரீநிதி…
இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தற்போது இந்திய அளவில் பிரபலமான கலைஞர்களாகியுள்ளனர். அந்த வகையில் கேஜிஎஃப் 2 படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் முன்னணி நடிகையாகி இருக்கும் ஸ்ரீநிதி தனது வாழ்க்கையையே மாற்றிய கேஜிஎஃப் மற்றும் அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் பற்றி எமோஷனலாக ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் “உங்கள் சொந்த முடிவுகள் உங்கள் வாழ்க்கையை மாற்றி, உங்கள் கனவுகளை அடைய உதவும். ஆனால் சில சமயங்களில் மிக அரிதாகவே வேறொருவரின் முடிவும் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்ததால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் நன்றி பிரசாந்த்.” எனக் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8