மார்ச் 21 ஆம் தேதி 11.07 மணிக்கு.... செம்ம அப்டேட் கொடுத்த கேஜிஎப் 2 படக்குழு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்ற TOOFAN பாடலின் லிரிக் வீடியோ மார்ச் 21 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertising
>
Advertising

முதல் படம் ஹிட் ஆயிடுச்சுன்னா பைத்தியம் புடுச்சிடும்…. செல்பி பட விழாவில் மிஷ்கின் பேச்சு!

ரசிகர்களைக் கவர்ந்த கேஜிஎப்

2018 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் உருவாகி இந்தியா முழுவதும் வெற்றியடைந்த படம் KGF. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கினார். யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் இந்திய மொழிகளில் ஹிட்டான கேஜிஎப், ஓடிடியில் வெளியான போது மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்று பட்டி தொட்டியெங்கும் கலக்கியது.. இந்த படத்தின் வெற்றியைத்தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இணைந்த பிரபல நடிகர்கள்

இரண்டாம் பாகத்தில் யாஷுடன்  சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவு இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகண்டூர் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் இந்த படத்தில் சஞ்சய் தத் அதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் பாலிவுட்டிலும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ரிலிஸ் தாமதம்

முதலில் கடந்த ஆண்டு 16-ம் தேதி 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால், கொரோணா காரணமாக படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.  அதையடுத்து வரும்  ஏப்ரல் 14,2022 அன்று KGF-2 வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான  திரைகளில் இந்த படம் வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 ரிலிஸாகும் அதே நாளில் அமீர் கான் நடிப்பில் FORREST GUMP படத்தின் ரீமேக் ஆன லால் சிங் சட்டா படமும் ரிலீஸாவதாக இருந்தது.  ஆனால் படத்தின் பணிகள் இன்னும் முடியாததால் அந்த படத்தின் ரிலிஸ் ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய அளவில் பெரிய போட்டிகள் இல்லாமல் கேஜிஎப் 2 ரிலிஸாகிறது.

TOOFAN லிரிக் வீடியோ

ஏப்ரல் 14 ஆம்  தேதி கேஜிஎப் 2 ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் இப்போது ஒரு சூப்பர் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வரும் மார்ச் 21 ஆம் தேதி படத்தில் இடம்பெற்றுள்ள TOOFAN என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்திய ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் 2 ரிலிஸ் நெருங்கியுள்ளதால் இனி அடுத்தடுத்து அப்டேட்களைப் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

சர்ச்சையான கதையா இருக்கு… எடுபடுமா? ரசிகரின் கமெண்ட்டுக்கு ‘நச்’ விளக்கம் கொடுத்த RJ பாலாஜி

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 announced first single lyric video update

People looking for online information on Kgf 2, Prashanth Neel, Raveena Tandon, Ravi Basrur, Sanjay Dutt, Srinidhi Shetty, Vijay Kiragandur, Yash will find this news story useful.