கேரளா அரசால் நடத்தப்படும் திரையரங்கில், பெற்றோர்கள் தங்கள் கை குழந்தைகளுடன் படம் பார்க்க சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | BABA : ரஜினி நடிப்பில் பாபா ... வந்தாச்சு அதிகாரப்பூர்வ ரீ ரிலீஸ் தேதி.. வேகமாக புக் ஆகும் TICKETS..
திரையரங்குகளில் கை குழந்தைகளின் அழுகை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இதை சரிப்படுத்தும் விதமாக கேரள அரசு புதிய வசதியை திரையரங்குகளில் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி-ஸ்ரீ-நிலா தியேட்டர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக Crying Room அறையின் புகைப்படங்களை கேரள கலாச்சார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பாகும் போது அழுகும் குழந்தையை "அழுகை அறை"க்கு அழைத்து சென்று ஒலி-தடுப்பு வசதியுடன் கூடிய இந்த அறைகளில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து திரைப்படத்தைப் பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த அறையினுள் குழந்தை அழுதாலும் வெளியே படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சத்தம் கேட்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒலி-தடுப்பு அறையில் பெற்றோர்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சில இருக்கைகள் உள்ளன.
"அழுகை அறை" ஒரு தொட்டில் மற்றும் டயபர் மாற்றும் வசதியுடன் உள்ளது. இந்த அறைக்குள் பெற்றோர்கள் படம் பார்க்க வசதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநில அரசின் கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (KSFDC) மாநிலத்தில் உள்ள மற்ற திரையரங்குகளில் இதுபோன்ற மேலும் பல "அழுகை அறைகளை" அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
“குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் படத்தை ரசிப்பது அரிது. குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் இருள், ஒலிகள் மற்றும் விளக்குகளால் அசௌகரியமடைகிறார்கள், மேலும் குழந்தைகள் அழுவதால் அவர்கள் வெளியே செல்ல நேரிடுகிறது, ” அரசாங்கத்தால் நடத்தப்படும் திரையரங்குகளை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றதாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த முயற்சி" என்று அமைச்சர் வாசவன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Also Read | லீக் ஆன 'துணிவு' படத்தின் பாடல் வீடியோ.. வைரலாகும் பாடகர் வைசாக்கின் இன்ஸ்டாகிராம் பதிவு!