நடிகர் கருணாஸின் மகனான கென் கருணாஸ் அசுரன் படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி ரசிகர்களைக் கவர்ந்தார்.

Also Read | “அப்படி பண்ணிருக்க கூடாது”…. “நான் பண்ண டார்ச்சர்ல அப்பா இப்ப…” CWC ஸ்ருதிகா emotional.. video!
அசுரன் தந்த அறிமுகம்….
தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம். தனுஷூடன் இந்த படத்தில் மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக இந்த படத்தை தயாரித்தார்.
சிதம்பரமாக கலக்கிய கென்….
அசுரன் படத்தில் தனுஷுக்கு இணையான வேடமாக அமைந்தது கென்னின் வேடம். இந்த படத்தில் சிதம்பரம் என்னும் பதின் பருவ சிறுவன் வேடத்தில் அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்க வேண்டும் என்ற உந்துதலோடு இருக்கும் வேடத்தில் சிறப்பாக நடித்துக் கலக்கினார்.இவர் தமிழ் சினிமா பிரபலங்களான கருணாஸ் மற்றும் கிரேஸ் தம்பதிகளின் மகனாவார். இந்த ஒரே படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற கென், இப்போது தனுஷோடு வாத்தி படத்தில் நடித்து வருகிறார். வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது இப்போது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சமூகவலைதளங்களில் அடிக்கும் லூட்டி….
இந்நிலையில் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் கென் கருணாஸ், தனது அம்மா கிரேஸூடன் இணைந்து பல ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடிய பாடல் வீடியோ ஒன்று வைரலானது. அதையடுத்து இப்போது கென் கிரேஸைக் கோபப்படுத்தி திட்டு வாங்குவது போன்ற ஒரு வீடியோவைக் பகிர்ந்துள்ளார்.
அதில் கசப்பான சாக்லேட் ஒன்றைக் கொடுத்து அவரை சாப்பிட சொல்லி அவரைக் கோபப்படுத்தி அதை வீடியோவாக்கி இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் கிரேஸ், கென்னை பொய்யான கோபத்துடன் திட்டும் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8