விலையுயர்ந்த சொகுசு காரில் செல்ல நாயுடன் கீர்த்தி சுரேஷ்.. அந்த கார் விலை மட்டும் இம்புட்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Advertising
>
Advertising

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.34 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய் Kand Nyke உடன், உலகின் விலையுயர்ந்த சொகுசு காரான 2021 MINI Countryman காரில் இருந்து எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். வார இறுதி நாளை கார் மற்றும் நாயுடன் கொண்டாட உள்ளதாக கூறியுள்ளார்.

இந்த MINI Cooper Countryman  காரின் விலை 45 லட்சம் முதல் 55 லட்சம் வரை இந்தியாவில் விற்கப்படுகிறது. பெட்ரோல் & மின்சார வகைகளான ஹைப்ரிட் வகைகளிலும் இந்த கார் கிடைக்கிறது. மணிக்கு 15 கி மீ மைலேஜ் தரவல்லது. 5 பேர் அமரக்கூடிய வகையில் 2000 cc இஞ்சினுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh with her dog in Mini Cooper Countryman

People looking for online information on Kand Nyke, Keerthy Suresh, Mini Cooper, MINI Countryman will find this news story useful.