LATEST சூப்பர்ஹிட் பாட்டுக்கு செம டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்! ரசித்த நாய்க்குட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நாய்க்குட்டியுடன் ஆடிய நடனம் வைராலாகி வருகிறது.

Advertising
>
Advertising

"வலிமை FDFS-க்கு டிக்கெட் வாங்கிட்டேன்"- வெங்கட்பிரபு சொன்ன தகவல்! பிரேம்ஜி கொடுத்த Reply!

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். டொவினோ தாமஸின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ரொமாண்டிக் பாடல் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துக்கு வெளியாகி நல்ல ஹிட் அடித்துள்ளது. இதுவரை 40 மில்லியன் ஆர்கானிக் வியூஸ்களை பெற்று வருகிறது.

யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து இசை பிரிவில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. இந்த ஆண்டின் மெல்லிசைப் பாடலாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது. 2022 மே 12-ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் பெயர் கலாவதி. Come on கலாவதி எனும் இந்த பட பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் நாய்க்குட்டியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

ஒரே விழாவில் ரஜினி & கமல்! வலிமை வினியோகஸ்தரின் குடும்ப விழாவில் கோலாகலம்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh super instagram Reel dance with her dog

People looking for online information on Annatthe Movie, அண்ணாத்த, கீர்த்தி சுரேஷ், சர்காரு வாரி பாட்டா, Instagram Reel dance, Keerthy Suresh will find this news story useful.