உதயநிதியுடன் A.R. ரஹ்மான்.. ARR பிறந்தநாளுக்கு கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த செம்ம போட்டோ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான்.

Advertising
>
Advertising

Also Read | "பொங்கலுக்கு வாரிசு படத்தில் இதை எல்லாம் எதிர்பார்க்கலாம்".. நடிகர் மேத்யூ வர்கீஸ் EXCLUSIVE!

தமிழ், இந்தி சினிமா படங்களின் வெற்றிக்கு A. R. ரஹ்மானின் இசை மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. குறிப்பாக சொல்லனும் என்றால் இந்தியில் ராக் ஸ்டார், லகான், தமாஸா, ரங்கீலா ஆகியன. தமிழில் நியூ, காதல் தேசம், காதலர் தினம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகியன.

சமீபத்தில் வெளியான படங்களான  மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு, பார்த்திபனின் இரவின் நிழல், கோப்ரா, 99 சாங்ஸ் ஆகிய  படங்களில் ரஹ்மானின் இசை முக்கிய பங்கு வகித்தது.

இந்த படங்களின் அனைத்து பாடல்களும் மற்றும் பின்னணி இசை கோர்ப்புகளும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தன.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், ஆடு ஜீவிதம், அயலான் மற்றும் கமல்ஹாசன் 234, லால் சலாம் ஆகிய படங்களில் ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார்.

இன்று தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடும் ரஹ்மானை அவரது ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின், A.R. ரஹ்மானுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | "உடைய மாத்துறதா இருந்தா இப்போ மாத்திக்கங்க".. பிக்பாஸ் சொன்னதும் ஒரு செகண்ட் ஷாக் ஆன ஷிவின்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh shared Unseen photo of AR Rahman Udhayanidhi

People looking for online information on AR Rahman, Keerthy Suresh, Udhayanidhi Stalin will find this news story useful.