செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாணிக் காயிதம் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | வேற லெவல்..பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நடிகை ராதிகா! முழு விவரம்

ராக்கி பட இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகிய படம் 'சாணிக் காயிதம்'. அருண் மாதேஸ்வரன் இயக்குனர் தியாகராஜா குமராராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இது நடிகராக செல்வராகவனுக்கு அறிமுகப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவு அடைந்துள்ளது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 80 களின் பிற்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கிரைம் டிராமாவாக உருவாகி உள்ளது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி படம் குறித்த படங்களையும் அப்டேட்களையும் பகிர்ந்து வந்தார். இந்த படத்தில் செல்வராகவனுக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டீசரைப் பகிர்ந்து, இந்த படம் வரும் மே மாதம் 6 ஆம் நாள், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் என நடிகர் செல்வராகவன் அறிவித்துள்ளார். இந்த படம் சென்சார் போர்டு மூலம் A சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனாரக இருந்தவர். இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர்.

சாணிக் காயிதம் படத்தை அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம்.. பிரபல OTT-யில் ரிலீஸ்! எப்போ? எதுல? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy suresh selva raghavan saani kaayidham direct OTT premiere on Amazon Prime Video

People looking for online information on Keerthy Suresh, Saani kaayidham Movie, Saani kaayidham Movie Release on OTT, Selva Raghavan will find this news story useful.