ONAM: கேரள ஸ்டைலில் உதயநிதி & வடிவேலுக்கு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாமன்னன் படக்குழுவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விருந்து வைத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு தகவல்!

சில நாட்களுக்கு முன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் 'மாமன்னன்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. 

மேலும், இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்ற செய்தியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன், பஹத் பாசில், வடிவேலு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

இந்த மாமன்னன் படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரப் பெயரும் "மாமன்னன்" என கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு, சிறிது இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்காட்டில் கடந்த மார்ச்-4 ல் துவங்கி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. மாமன்னன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் கடந்த மே மாதம் முதல் வாரம் துவங்கியது. மே மாதம் 8 ஆம் தேதி வரை இந்த படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டன.

பின்னர் மாமன்னன் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று ஓணம் திருநாளை முன்னிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் படக்குழுவுக்கு பூக்கோலம் போட்டு கேரள ஸ்டைலில் சத்யா விருந்து வைத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

Also Read | பிரபல TV சேனலில் ஒளிபரப்பாகும் 'வெந்து தணிந்தது காடு' இசை வெளியீட்டு விழா! எப்போ? எதுல?

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Onam Celebration with Udhayanidhi Stalin Vadivelu

People looking for online information on Keerthy Suresh, Keerthy Suresh Onam Celebration, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.