தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.
Also Read | பேங்காக் நகரில் அஜித்குமார்.. 20 லட்ச ரூபாய் சூப்பர் பைக்கில் சுற்றுப்பயணம்.. வைரல் ஃபோட்டோஸ்
பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.
தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.
தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.
சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர்,
உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் 2 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய BMW X7 காரை வாங்கியுள்ளார். இந்த காரில் 360 டிகிரி கேமரா, வெப்பநிலை கட்டுப்பாட்டு கருவி, வானிலை கட்டுப்பாட்டு கருவி, வயர்லெஸ் போன் சார்ஜர் வசதி கொண்டது. Panoramic Sun Roof, சைகை மூலம் காரை கட்டுப்படுத்தும் Gesture Control, பார்க்கிங் சென்சார், ட்ராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த BMW X7 Phytonic Blue SUV காரின் இந்திய விலை பெட்ரோல் கார்களுக்கு 1.50 கோடி ரூபாயும், டீசல் கார்களுக்கு 1.20 கோடி முதல் 2 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த சொகுசு கார் ஒரு லிட்டருக்கு 10 -14 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரவல்லது. 5.6 வினாடிகளில் 100 கி மீ வேகத்தை எட்டும் வகையில் இந்த கார் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
டீசல் இன்ஜின் 2993 சிசி, பெட்ரோல் இன்ஜின் 2998 சிசி கொள்ளளவு கொண்டது. தானியங்கி பரிமாற்றத்துடன் இந்த கார் கிடைக்கிறது. X7 7 இருக்கைகள் கொண்ட 6 சிலிண்டர் கார் ஆகும். மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வசதி கொண்டது.
Also Read | இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!