கீர்த்தி சுரேஷின் விலையுயர்ந்த சொகுசு காருக்கு பூஜை.. விலை மட்டும் இம்புட்டா? என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்தி சுரேஷ் தனது விலையுயர்ந்த சொகுசு காருக்கு பூஜை செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "ஆணுக்கு நிகர் பெண்.. இந்திராகாந்தி, ஜெயலலிதா, ,மம்தா பேனர்ஜி வரிசையில் குஷ்பு" - பேரரசு

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர்,
உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய்  Nyke உடன் இணைந்து தனது BMW X7 காருக்கு ஆயுத பூஜை செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார்.

இந்த BMW X7 Phytonic Blue காரின் இந்திய விலை பெட்ரோல் கார்களுக்கு 1.20 கோடி ரூபாயும், டீசல் கார்களுக்கு 1.20 கோடி முதல் 1.80 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த சொகுசு கார் ஒரு லிட்டருக்கு 10 -14 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரவல்லது.

டீசல் இன்ஜின் 2993 சிசி, பெட்ரோல் இன்ஜின் 2998 சிசி கொள்ளளவு கொண்டது. தானியங்கி பரிமாற்றத்துடன் இந்த கார் கிடைக்கிறது. X7  7 இருக்கைகள் கொண்ட 6 சிலிண்டர் கார் ஆகும்.

 

Also Read | Santhanam : அட்ரா சக்க.. first time நடிகர் சந்தானம் பாடிய பாட்டு...!! வெளியான Single Teaser!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Drive BMW X7 Phytonic Blue Car Price Details

People looking for online information on BMW X7 Phytonic Blue Car, Keerthy Suresh will find this news story useful.