அடிபொலி..!! தீபாவளி பட்டாசு வெடிக்கும் கீர்த்தி சுரேஷ்.. கலக்கும் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்தி சுரேஷ் தனது தீபாவளி கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய தயாரிப்பாளர்! இவரா?

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.  

தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 1.36 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கம்பி மத்தாப்பு, புஸ்வாணம் ஆகிய பட்டாசுகளை வெடிக்கும் புகைப்படங்கள் & வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | 'துணிவு 'லுக்கில் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட்டம்.. மனைவி ஷாலினியுடன் அஜித்குமார்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Diwali Celebration with Her Dog Nyke

People looking for online information on Diwali Celebration, Keerthy Suresh, Keerthy Suresh Diwali Celebration will find this news story useful.