கீர்த்தி சுரேஷ் கேரக்டர் பெயரில் COLORFUL பாடல்! மாஸ் ஹீரோவுடன் நடிக்கும் படத்தின் வேற லெவல் UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: தெலுங்கில் முன்னணி மாஸ் ஹீரோவுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

"ஆளுநரின் செயல் தமிழக மக்களுக்கு எதிரானது" - நீட் விவகாரத்தில் கொந்தளித்த பா. ரஞ்சித்

தெலுங்கில் ராஷிகா,  விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த 'கீதா கோவிந்தம்' படத்தை தொடர்ந்து `சர்காரு வாரி பாட்டா' படத்தை இயக்குனர் பரசுராம் இயக்குகிறார்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'சர்காரு வாரி பாட்டா' படம் வங்கி மோசடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற வருடம் இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது.

சென்ற ஜூலை 31ம் தேதி இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. பின் மகேஷ்பாபு பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் முதல் சிங்கிள் ரொமாண்டிக் பாடல் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் பெயர் கலாவதி என்றும் சிங்கிள் பாடலின் தலைப்பின் பெயரும் கலாவதி என்றும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்த ஆண்டின் மெல்லிசைப் பாடலாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டராகவும், ஏஎஸ் பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணிபுரிகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதிகளில் நடந்து வருகிறது. 2022 மே 12-ம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது.

அஜித் நடிக்கும் வலிமை! தமிழை விட தெலுங்கில் இன்னும் தரமான சம்பவம் இருக்கு!

 

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh character name Kalaavathi in Sarkaru Vaari Paata

People looking for online information on கீர்த்தி சுரேஷ், சர்காரு வாரி பாட்டா, Kalaavathi, Keerthy Suresh, Sarkaru Vaari Paata will find this news story useful.