அடட.. செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Advertising
>
Advertising

Also Read | இமயமலையில் சாகச பைக் RIDE.. அஜித்துடன் இணைந்த பிரபல முன்னணி நடிகை!

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.35 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய்  Nyke-ன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். 'இந்த நாள் இனிய நாள்' என தலைப்பிட்டு நாயை கொஞ்சும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

 

Also Read | நண்பரின் DUCATI பைக்கில் அஜித்குமார்.. கெத்து Look-ல் தோரணையான போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Celebrated her dog Nyke birthday

People looking for online information on Keerthi Suresh, Keerthy Suresh Celebrated her dog Birthday, Keerthy Suresh Latest Photos will find this news story useful.