நடிகை கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் திடீர் சந்திப்பு.. ரசிகர்களை கவரும் சூப்பர் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் சந்திப்பு தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. செம புதிய போஸ்டருடன் வெளியான 1ஸ்ட் சிங்கிள் அப்டேட்!

தேசிய விருது பெற்ற மாத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் ஜான்வி கபூர்  'மிலி' என்ற படத்தில் நடித்துள்ளார்.

மிலி நவுடியல் எனும் நர்சிங் படித்த 24 வயது பெண் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்துள்ளார்.  தயாரிப்பாளர் போனி கபூர் தனது & ஜீ ஸ்டுடியோஸின் அடுத்த தயாரிப்பான 'மிலி' மூலம் தனது மகளை தனது தயாரிப்பில் நடிக்க வைத்துள்ளார். 
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜாவித் அக்தர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் தயாரித்து, மாத்துக்குட்டி சேவியர் இயக்கிய 'மிலி' திரைப்படம் 2022 நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹெலன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆக இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டு வருகிறார். இச்சூழலில் நடிகை கீர்த்தி சுரேஷ் & ஜான்வி கபூர் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படத்தை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | VIDEO: சன்னி லியோனுக்கு பால் கோவா & தர்ஷா குப்தாவுக்கு லட்டு.. கலக்கிய G.P. முத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh and Janhvi Kapoor Meeting Photos went viral

People looking for online information on Janhvi Kapoor, Keerthy Suresh will find this news story useful.