நயன்தாராவுக்கு பிறகு, சீதையாக பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் தேசிய விருது நடிகை?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் பிரபாஸ், ராதே ஷ்யாம் என்கிற படத்தில் பூஜா ஹெக்டேவுடன் நடிக்கிறார்.

keerthisuresh play seeta role prabhas adipurush ஆதிபுருஷ்

இதனைத் தொடர்ந்து ஓம் ராவத் இயக்கத்தில் "ஆதிபுருஷ்" என்கிற மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படத்திற்கும் தற்போது இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

keerthisuresh play seeta role prabhas adipurush அடிபுருஷ்

அண்மையில் பிரபாஸ் நடித்து வெளியான "சாகோ" படம் வியாபார ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் T-Series மற்றும் Retrophiles தயாரிப்பில் பிரபாஸ் நடிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் என்கிற இந்த படத்தில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணைவதாக கூறப்படுகிறது.

இதில் ராம் கதாபாத்திரத்தில் பிரபாஸூம் ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சையஃப் அலி கானும் சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ஸ்ரீ ராமராஜ்ஜியம் படத்தில் நயன் தாரா சீதையாக நடித்திருந்தார். ஒருவேளை ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தால்,நயன் தாராவைத் தொடர்ந்து சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் தற்போதைய அடுத்த இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிவிடுவார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthisuresh play seeta role prabhas adipurush ஆதிபுருஷ்

People looking for online information on Adipurush, Keerthi Suresh, Prabhas will find this news story useful.