சாணிக்காயிதம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
ரத்தம் தெறிக்க தெறிக்க…
ஹாலிவுட் மற்றும் கொரியன் படங்களில் வன்முறைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் படங்கள் அதிகம். இந்த படங்களுக்கென்றே உலகம் முழுவதும் உள்ளனர். இந்நிலையில் தமிழில் இப்படி ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்ஷன் படமாக ‘ராக்கி’ படம் உருவாகி வெளியானது. இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த படமாக ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படமும் ராக்கிப் படம் போலவே ஆக்ஷன் மற்றும் வன்முறைக் காட்சிகளை அதிகமாகக் கொண்டுள்ள படமாக உருவாகியுள்ளது தெரிகிறது.
சாணிக்காயிதம் டிரைலர்…
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து நேற்று படத்தின் டிரைலர் இணையத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. இறுக்கமான வண்ணத்தில் ஆக்ஷன் படங்களின் டோனில் வெளியாகியுள்ள இந்த டிரைலரில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. சங்கையா கதாபாத்திரத்தில் நடிக்கும் செல்வராகவனும், பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷும் அடுத்து 24 கொலைகளை செய்தது பற்றிய விசாரணைக் காட்சிகளோடு தொடங்கும் டிரைலர் அவர்கள் கொலை செய்யும் காட்சிகளை ரத்தமும் சதையுமாகக் காட்டுகிறது. ராக்கி போலவே ஆக்ஷன் பட பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட படம் என்று டிரைலர் மூலம் அறிய முடிகிறது.
பொன்னியின் Revenge-க்கு உதவும் சங்கையா…
இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தில் “கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை சாணி காயிதம் சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். அடுத்தது என்ன நடக்கிறது என்ன என்பதே கதை” எனத் தெரியவந்துள்ளது.
இயக்குனர் கருத்து…
இந்த படத்தைப் பற்றி அதன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில் “சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்” எனக் கூறியிருக்கிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8