செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக்காயிதம் திரைப்படம் மே 6 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.
Also Read | KRK: வேற லெவல் waiting-ல் ரசிகர்கள்… பிரபல திரையரங்கம் வெளியிட்ட செம்ம அப்டேட்!
ராக்கி இயக்குனரின் அடுத்த படம்…
ராக்கி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அந்த படத்தின் உருவாக்கம் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தது. ஆனால் அளவுக்கதிகமாக வன்முறை படத்தில் உள்ளது என்ற விமர்சனங்களும் எழுந்தன. இதையடுத்து இப்போது அவர், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை இயக்கியுள்ளார். இது நடிகராக செல்வராகவன் ஒப்பந்தம் ஆன முதல் படம். ஆனால் இந்த படத்துக்கு முன்பே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறைவு அடைந்துள்ளது. இதையடுத்து மே 6 ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.
சாணிக்காயிதம்…
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. போஸ்டர்கள் மூலம் இந்த படமும் ராக்கி போலவே ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த படம் 80 களின் பிற்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கிரைம் டிராமாவாக உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி படம் குறித்த படங்களையும் அப்டேட்களையும் பகிர்ந்து வந்தார். இந்த படத்தில் செல்வராகவனுக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
ரத்தம் தெறிக்கும் டிரைலர்…
சில தினங்களுக்கு இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதையடுத்து இன்று படத்தின் டிரைலர் இணையத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகியுள்ளது. இறுக்கமான வண்ணத்தில் ஆக்ஷன் படங்களின் டோனில் வெளியாகியுள்ள இந்த டிரைலரில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. சங்கையா கதாபாத்திரத்தில் நடிக்கும் செல்வராகவனும், பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷும் அடுத்து 24 கொலைகளை செய்தது பற்றிய விசாரணைக் காட்சிகளோடு தொடங்கும் டிரைலர் அவர்கள் கொலை செய்யும் காட்சிகளை ரத்தமும் சதையுமாகக் காட்டுகிறது. ராக்கி போலவே ஆக்ஷன் பட பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட படம் என்று டிரைலர் மூலம் அறிய முடிகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8