“பிறந்ததும் தந்தையை இழந்தேன்.. இப்போ ஞான தந்தையை இழந்தேன்!”.. கீரா குறித்து சிவகுமார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் கீரா மரணம் அடைந்துள்ளார்.  கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்த கி. ராஜநாராயணன் தமது 99 வயதில் 17-5-21 அன்று நள்ளிரவில் மறைந்தார்.

இந்நிலையில் கீரா மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் குறிப்பிடும்போது, “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து விட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது வாழ்ந்த கீரா அவர்களை இழந்து விட்டேன். கீரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.!” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: அதிர்ச்சி!!.. பிரபல 'இரட்டை இயக்குநர்களுள் ஒருவரான' ஜெர்ரியின் தாயார் கொரோனாவால் மரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Keeraa demise actor sivakumar shares emotional post

People looking for online information on Keeraa, Kira, KiRajanarayanan, Sivakumar will find this news story useful.