துணை நடிகையான கவிதா ஸ்ரீ என்பவர், 1994-ஆம் ஆண்டு, நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்.
இவர் சினிமா ஷூட்டிங் எடுப்பதாக கூறி சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியை இரண்டு மாதங்களுக்கு வாடகைக்கு எடுத்துள்ளார்.
ஆனால் அவர் அந்த சொகுசு விடுதியில், மது மற்றும் மாதுக்களுடன் பிரைவேட் பார்ட்டி நடத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளார். பார்ட்டியில் சினிமாவில் காட்டப்படுவது போன்று மது விருந்துடன் பாடல்களை ஒலிக்கவிட்டு பல பெண்களை நடனமாட செய்துள்ளார்.
பார்ட்டியில் ஆடும் பெண்களின் மீது ஆண் விருந்தினர்கள் பணத்தை அள்ளி வீச வேண்டும். பிறகு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கும் நபர், அந்தப் பெண்ணுடன் பார்ட்டியில் ஈடுபடலாம் என தெரிவித்து இந்த பார்ட்டியை நடத்தியுள்ளனர். இந்த பார்ட்டியில் பெரும்பாலும் 40 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் இந்த பார்ட்டியில் இணைய ரூ.1599 நுழைவுக்கட்டணத்தை தமது கூகுள் பே-வில் கட்ட வேண்டும், பெண்களுக்கு இலவசம் என தனது இன்ஸ்டாகிராமில் கவிதா ஸ்ரீ விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்த போலீஸாருக்கு சந்தேகம் வலுக்க, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் அதிர்ந்துள்ளனர்.
பின்னர் அந்த விடுதி போலீஸாரால் சீல் வைக்கப்பட்டதுடன், பார்ட்டியில் ஈடுபட்ட 11 பெண்கள் 15 ஆண்கள், துணை நடிகை கவிதாஸ்ரீ அனைவரையும் கைது செய்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பண்ணை வீட்டில் நடிகையால் நடத்தப்பட்ட இந்த பார்ட்டி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.