நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் பிக்பாஸ் கவினா? ஹீரோயின் யாரா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது OTTயில் வெளிவந்துள்ள 'லிஃப்ட்' படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.

நல்ல வரவேற்பை பெற்றுள்ள லிப்ட் திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஆகாஷ்வானி வெப் தொடரில் நடித்து வரும் கவின் அடுத்ததாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ்க்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக வானி போஜன் நடிக்க இருக்கிறார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய இணைப்புகள்

Kavin will play lead role in nayanthara Rowdy Pictures

People looking for online information on Kavin, Nayanthara, Vani Bhojan, Vignesh Sivan will find this news story useful.