நடிகர் கவின் நடிப்பில் 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
Also Read | ரஜினிகாந்த் நடிப்பில் காந்தாரா - 2 படம்?.. இயக்குனர் ரிஷப் ஷெட்டி அளித்த வைரல் பதில்! TRENDING
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவின் மற்றும் அபர்ணா தாஸூடன் K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் கவின் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலின் கவின் Fans Festival என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மீம்ங்களை பகிர்ந்து அந்த மீமில் இருந்து கேள்விகள் கவினிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக கவினுக்கு இருக்கும் பெண் ரசிகைகள் குறித்து, "பெண் ரசிகைகளை எப்படி சமாளிக்கிறீர்கள். சிலர் Love Proposal செய்வாங்களே.." என நெறியாளர் கேட்ட கேள்விக்கு, "இது மாதிரி மாயையில் இருந்து வெளியே வாங்க. நிஜ வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்காது. நான் விஜய் டிவியில் இருக்கும் போது நடிகை சமந்தாவை ஒன் அண்ட் ஒன்லி இண்டர்வியூ எடுத்தேன்.
Also Read | "நொடிப்பொழுதில் உயிர் தப்பினேன்.. கடவுளுக்கு நன்றி".. ஷூட்டிங் விபத்து குறித்து விஷால்! VIDEO