''சாக்ஷிக்கு நடந்த அநியாத்துக்கு நான் பொறுப்பு. அதனால...'' - லாஸ்லியா எடுத்த அதிர்ச்சி முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோருக்கு இடையே நடந்த காதல் அத்தியாயங்கள் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக வைத்திருந்தது.

சண்டை, ஊடல் பின்பு மீண்டும் கூடல் என மொத்த கவனமும் அந்த மூன்று பேர் மேல் தான் இருந்தது. இந்நிலையில் இந்த பரபரப்பு இனி இருக்காது என்று தான் நேற்று நடந்த அத்தியாயங்கள் நமக்கு சொல்லிய உண்மை.

நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது, அல்லது கேட்க வேண்டியவற்றை ரகசியமாக கடிதம் மூலம் சொல்லிக்கொள்ளுங்கள் என்று பிக்பாஸ் சொன்னவுடன் பிரச்சனை பூதாகரமானது.

அதுவரை அவர்கள் மூன்று பேருக்குள் மட்டுமே இருந்த பிரச்சனை பொதுவெளியில் போட்டு உடைக்கப்பட்டது. கவினும் சாக்ஷியும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் சரவணன் உள்ளிட்டோர் கவினை சமாதானப்படுத்த முயல்கின்றனர். ஆனால் 'அவ என்ன ஏமாத்துறா' என்று கவின் பிடிவாதமாக இருக்கிறார். அப்போது அங்கு வரும் லாஸ்லியா, சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்கு நான் பொறுப்பு. தயவு செய்து யாரும் என்னிடம் பேசாதீர்கள் என்று அழுகையுடன் செல்கிறார்.

பிக்பாஸின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடு ராத்திரி 2 மணிக்கு என்ன ஃபிரெண்ட்ஷிப் வேண்டியிருக்கு என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் கவினை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில் சாக்ஷியும், கவினும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது கவின், மோதும் மச்சான் ரொம்ப நல்லா இரு. என்று சொல்கிறார். மற்ற போட்டியாளர்கள் முன்பு, இந்த வாரம் நான் காப்பாற்றப்பட்டாலும் கூட என்னை அடுத்த வாரத்துக்கு மீண்டும் நாமினேட் பன்னுங்க. ரெண்டு பேரும் என்ன வேற மாதிரி பார்க்குறாங்க என்று  பேசுகிறார்.

''சாக்ஷிக்கு நடந்த அநியாத்துக்கு நான் பொறுப்பு. அதனால...'' - லாஸ்லியா எடுத்த அதிர்ச்சி முடிவு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kavin, Sakshi, Losliya and Kamal Haasan's Bigg Boss Promo August 1

People looking for online information on Bigg Boss 3, Kamal Haasan, Kavin, Losliya will find this news story useful.