கவின் - பிகில் ரெபா மோனிகா நடிக்கும் புதிய வெப் சீரீஸ்! கவினே பகிர்ந்த BTS IMAGE! மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Kavin Reba Monica John New Web Series 'Aakashvaani' Update

நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார். சமீபத்தில் OTTயில் வெளிவந்துள்ள 'லிஃப்ட்' படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார். 

Kavin Reba Monica John New Web Series 'Aakashvaani' Update

நல்ல வரவேற்பை பெற்றுள்ள லிப்ட் திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கவின் அடுத்ததாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ்க்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கமான பூஜை விழாவுடன் ஆகாஷ்வானி  வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியது.  தளபதி விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பணியாற்றிய ரீபா மோனிகா ஜான் இதில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் வெளியான 'குட்டி பட்டாஸ்' மியூசிக் வீடியோவில் தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்ந்தவர். 

இந்நிலையில் நடிகர் கவின், இன்று (அக்டோபர் 8) தனது சமூக வலைத்தளத்தில் சக நடிகர்கள் மற்றும் ஆகாஷ்வானி படக்குழு உறுப்பினர்களுடன் எடுத்த ஒரு படத்தைப் பகிர்ந்து ஆகாஷ்வானி வெப்சீரீஸ் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது என அறிவித்தார். 

சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தில் கவின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Reba Monica John New Web Series 'Aakashvaani' Update

People looking for online information on Aakashvaani, Kavin, Reba Monica Jhon will find this news story useful.