VIDEO: "தளபதியே சொல்லிட்டாரு.. எனக்கு இது போதும்!".. சிவாங்கி ஸ்டைலில் கவின் மகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2020 டிசம்பரில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் ‘தளபதி65’ படம் பற்றிய அற்புதமான அறிவிப்பு வந்தது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் இந்த படத்துக்கு மிக அண்மையில் தான் ‘BEAST’ என பெயரிடப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘BEAST’ பட பூஜையின் போது, தளபதி விஜய் தமது ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் பற்றி ‘செம்மையா இருந்துச்சு கவின்’ என்று கூறி, தன்னை வெகுவாக பாராட்டியதாகவும், அதை பற்றி நண்பர்களிடத்தில் சொல்லி மகிழ்ந்ததாகவும், விஜய் சார் வேற லெவல் என்றும் ‘பிக்பாஸ்’ கவின், ‘குக் வித் கோமாளி’ புகழிடம் சிலாகித்து பேசும் வீடியோ புகழின் சேனலில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் தளபதி65 படத்தின் இயக்குநர் டீமில் பணிபுரிந்த கவின், விஜயுடன் உதவி இயக்குநர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது , அங்கு ஓரமாக நின்ற கவினை விஜயே அழைத்து புகைப்படத்தில் நிற்கச் சொன்னதாகவும் கவின் குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்தார்.

நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் பீஸ்ட் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சி அளிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

ALSO READ: "ஆடி கார் தான் .. சொகுசு கார் இல்ல.. தடை செய்த கேமை விளையாடல".. பப்ஜி மதன் மனைவி பரபரப்பு! பாய்கிறதா குண்டர் சட்டம்?

தொடர்புடைய இணைப்புகள்

Kavin Opens up about thalapathy vijay praised him video

People looking for online information on Kavin, Nelson Dilipkumar, Thalapathy65, Vijay will find this news story useful.