"கோவிலுக்கு போனேன்".. டாடா வெற்றிக்கு பின் கமலை சந்தித்த கவின்.. வைரல் PIC!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சீரியல்கள் பெரிய அளவில் ஹிட்டானதை தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்க கவின் முயற்சித்து இருந்த சூழலில், மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பும் கவினுக்கு கிடைத்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக ஆடி மக்கள் மத்தியில் இன்னும் பெயர் பெற்ற கவினுக்கு வெள்ளித்திரை வாய்ப்புகளும் தேடி வந்தது. அந்த வகையில், கவின் நடிப்பில் 'லிஃப்ட்' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதற்கடுத்து, அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ள 'டாடா' என்னும் திரைப்படத்தில் நாயகனாக கவின் நடித்திருந்தார். கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் உள்ளிட்ட பலரும் டாடா திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners

டாடா படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. அப்படி இருக்கையில் தற்போது படமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. கவினின் நடிப்பும் அதிகம் பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில், டாடா திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

 

டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் நடிகர் கவின். நடிகர் கமல்ஹாசன் உடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கவின், "இன்று கோவிலுக்கு சென்றேன்" என்றும் தன்னுடைய கேப்ஷனில் கமல்ஹாசனை சந்தித்ததை கவின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kavin meets Kamalhaasan after dada movie release pic viral

People looking for online information on Dada, Kamal Haasan, Kavin will find this news story useful.