நேற்று முந்தைய தினம் பிக்பாஸில் வாக்குவாதங்கள் முற்றி மோசமான சம்பவங்கள் நடைபெற்றது. ஆரியை அனைத்து போட்டியாளர்களும் டார்கெட் செய்தனர். ஆரம்பத்தில் ரியோ, பாலா இருவருக்கும் சில சமயங்களில் வாக்குவாதம் முற்றி பிரச்சினைகள் வந்தது. ஆனால் நேற்றைய தினம் ரியோவுக்காக பேசுகிறேன் என்று பாலா ஆரியை போட்டு கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்பு ரம்யா, அர்ச்சனா, நிஷா, கேபி, அனிதா, சனம் போன்ற மற்ற போட்டியாளர்களும் அவருக்கு விரோதமாக எழும்பி நின்றனர். இந்நிலையில் ஆரி தனி ஆளாக செய்வதறியாமல் தவித்தார். பின்பு பாலா தனிமையில் இருந்த ஆரியின் கால்களில் விழுந்தார். இந்நிலையில் ஆரிக்கு ஆதரவாக போன சீசனின் கவின் ரசிகர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். பலரும் ஆரிக்கு ஆதரவாக மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் தெறிக்க விடுகின்றனர் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றது.