''இந்த போட்டோவை இப்படி POST பண்ணுவேன்னு நினைக்கல..'' - அருண் அலெக்ஸாண்டர் மறைவு.. கவின் எமோஷனல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மறைவுக்கு கவின் எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகராகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தவர் அருண் அலெக்ஸாண்டர். மாநகரம், கைதி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமானார். 

இந்நிலையில் நேற்று இவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார். 

தற்போது நடிகர் கவின் மறைந்த அருண் அலெக்ஸாண்டருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தோடு, ஒரு எமோஷனல் பதிவையும் வெளியிட்டுள்ளார். ''வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது என தெரியவில்லை. உங்களின் மறைவுக்கு இந்த போட்டோவை போஸ்ட் செய்வேன் என நினைக்கவில்லை. நீங்கள் நல்ல மனிதர். உங்களை மிஸ் செய்கிறோம்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து ரசிகர்கள் கவின் பதிவில் இரங்கலை கமன்ட்ஸாக கொடுத்து வர, இந்த போட்டோவும் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

அருண் அலெக்ஸாண்டர் மறைவு - கவின் பதிவு | kavin emotional on actor arun alexander demise

People looking for online information on Arun Alexander, Kavin will find this news story useful.