பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போட்டியாளர்கள் முன்பு தோன்றிய கமல்ஹாசன் அடுத்த வாரம் எலிமினேசேன் இருக்கும் என்று எச்சரித்திருந்தார்.

இதனையடுத்து திங்கள்கிழமை ( ஜூலை 2 ) அன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு பேரை நாமினேட் செய்தனர். இதில் கடந்த வாரத் தலைவர் வனிதா விஜயகுமாரும், இந்த வார தலைவர் மோகன் வைத்தியாவையும் நாமினெட் செய்யக் கூடாது என்பது விதி.
அதன் ஒரு பகுதியாக அதிகபட்சமாக மீரா 8 வாக்குகளையும், மதுமிதா 6 வாக்குகளையும் பெற்றனர். இந்நிலையில் விஜய் டிவி தற்போது புதிய புரோமோவை வெளியிட்டுள்ளது.
அதில், மறைமுக தான் ஹெல்ப் பண்ணேன் என மீரா சொல்ல, அறிவு இருந்தா அந்த ரூல்ஸ் திரும்ப படி என சத்தமிடுகிறார். மறுபுறம் மோகன் வைத்தியா, வயசுக்கு மரியாதை கொடுத்து பேசு என்று கோபமாக சொல்கிறார். அப்படி என்ன தான் செய்தார் மீரா ? இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிந்து விடும்.