சென்னை: பிக் பாஸ் கவின் நடிக்கும் புதிய வெப் சீரிஸின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார். சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தில் கவின் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சென்ற வருட சமீபத்தில் OTTயில் வெளிவந்த 'லிஃப்ட்' படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா ஐயர் நடித்துள்ளார். நல்ல வரவேற்பை பெற்றுள்ள 'லிப்ட்' திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கவின் அடுத்ததாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ்க்காக 'ஊர்க்குருவி' என்ற ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வழக்கமான பூஜை விழாவுடன் ஆகாஷ்வானி வெப் சீரிஸின் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்தில் பணியாற்றிய ரீபா மோனிகா ஜான் இதில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் வெளியான 'குட்டி பட்டாஸ்' மியூசிக் வீடியோவில் தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்ந்தவர்.
அக்டோபர் 8 அன்று ஆகாஷ் வானி படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வலைத்தொடரின் BTS புகைப்படங்களை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த வெப்-சீரிஸின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. முதல் லுக் வண்ணமயமாக ரொமாண்டிக்காக அமைந்துள்ளது. இந்த வெப் சீரிஸ் அல்லு அர்ஜூனின் ஆஹா OTT மூலம் வெளியாக உள்ளது.