KATRINA KAIF : தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுடன் கத்ரினா கைஃப் அரபிக் குத்து டான்ஸ்.. வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்,  பள்ளி மாணவர்களுடன் அரபிக் குத்து டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்பதே இந்த நிகழ்வு வைரலாவதற்கு இன்னொரு முக்கிய காரணம்.

Advertising
>
Advertising

Also Read | Lakshmi Vasudevan : “அந்த ஃபோட்டோஸ் என் Whatsapp -ல அத்தன பேருக்கும் அனுப்பி”.. சீரியல் நடிகை உருக்கம்.!

ஆம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது பிரபல தனியார் பள்ளி. இந்த பள்ளிக்கு பங்குதாரராக பிரபல நடிகை கத்ரினா கைஃப்பின் தாயார் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.  இந்த பள்ளிக்குதான் கத்ரினா கைஃப் விசிட் அடித்துள்ளதாகவும், அங்கு பயிலும் மாணவர்களுடனும், அப்பள்ளியின் ஆசிரியர்களுடனும் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியதாகவும் குறிப்பிடப்பட்டு வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

அதன்படி, கடந்த சனிக்கிழமை கத்ரினா கைஃப் இந்த பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அவரது வருகையால் பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். அப்போது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த கலைநிகழ்ச்சியை கண்டு கழித்த நடிகை கத்ரினா கைப், அந்த மழலைகளுடன் இணைந்து அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில், அனிருத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் அமையப்பெற்ற அரபிக்குத்து பாடலுக்கு பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைஃப் உற்சாகமாக நடனமாடியுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Also Read | கமல்ஹாசன் நிறுவனத்தின் கதர் உடையில் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புதிய படத்தின் சூப்பர் PHOTOSHOOT!

தொடர்புடைய இணைப்புகள்

Katrina Kaif dances for Arabic Kuthu song with school kids TN

People looking for online information on Arabic Kuthu, Katrina Kaif, Katrina Kaif dances for Arabic Kuthu will find this news story useful.