"இங்க யாரும் சண்டை போடலன்னா உங்க தேவையே இல்ல".. விக்ரமன் VS கதிர்.. சூடுபிடித்த டாஸ்க்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertising
>
Advertising

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது ஆரம்பமாகி உள்ளதாக தெரிகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளனர்

இதில் Ticket To Finale சுற்றில் இரண்டாவது டாஸ்க்காக, Debate டாஸ்க் அரங்கேறி இருந்தது. இதில் இரண்டு போட்டியாளர்கள் மாறி மாறி விவாதம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் முன்னே இருக்கும் பல்புகளில் அதிகம் யாருக்கு எரிகிறதோ அவரே வெற்றியாளர் என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார்.

இதில் பல போட்டியாளர்கள் இடையே நடந்த விவாதங்கள் பெரிய அளவில் விறுவிறுப்பை எகிற வைத்திருந்தது.

இதில் கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோருக்கிடையே Debate டாஸ்க்கில் விவாதம் நடைபெற்று இருந்தது. அப்போது பேசிய கதிரவன், "இரண்டு பேருக்கு நடுவுல சண்டை நடக்கிற போது ஏன் சண்டை போடுறீங்க அப்படின்னு கேட்குறதுக்காக நான் இந்த வீட்டுக்கு வரல. முதல்ல நான் இந்த வீட்டுக்கு வந்தது இங்க இருக்கிற மக்களையும் வெளிய பாத்துட்டு இருக்குறவங்களையும் Entertainment பண்றதுக்காக தான் இந்த வீட்டுக்கு வந்தேன்.

அது ஒரு முக்கியமான அம்சமா விக்ரமன கம்பேர் பண்றப்போ நான் பாக்குறேன். ஏன்னா, இந்த வீட்ல ரெண்டு பேர் பிரச்சனை வரும்போது தான் உங்களோட (விக்ரமன்) சேவை தேவைப்படுது தவிர இந்த வீட்ல பிரச்சனை பண்ணாம என்ன மாதிரியோ, இல்ல வேற யார் மாதிரியும் ஆட்கள் இருந்தாங்கன்னா, நீங்க அந்த மையமா இருக்கவே முடியாதுன்னு தான் நான் சொல்றேன். இப்போ ஒரு அஞ்சு பேர் இருக்காங்க, நான் அவங்கள கூப்பிட்டு ஒரு டான்ஸ் ஆடலாம், மியூசிக் போடலாம். ஆனா ரெண்டு பேருக்கு பிரச்சனை வரும் போது மட்டும் தான் நீங்க தேவை. அதன் அடிப்படையில உங்கள விட நான் தான் இந்த வீட்ல பெஸ்ட்டா ஃபீல் பண்றேன்.

அது மட்டுமில்லாம இத்தனை வாரங்கள் வந்த டாஸ்க் எல்லாத்துலயும் சரி, நம்ம தனித்தனியா பண்ண டாஸ்க் ஆனாலும் சரி உங்களை விட நான் பெட்டராவே பண்ணி இருக்கேன். சுவாரஸ்யம் கம்மின்னு ஒரு பெயர் நான் இந்த வீட்ல எடுத்ததில்லை. அதே மாதிரி Worst-ன்னு சொல்லி நான் ஜெயிலுக்கும் போனதில்ல. ஏன்னா ஒவ்வொரு டாஸ்க்லயும் என்ன தனியா காட்ட அவுட் ஆப் தி பாக்ஸ் என்ன பண்ண முடியுமோ அத நான் பண்ணி இருக்கேன்" என விக்ரமனை விட தான் சிறந்த போட்டியாளர் என தான் நினைக்கும் புள்ளிகளை கதிரவன் முன் வைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kathiravan points about he is best than vikraman bigg boss task

People looking for online information on Bigg boss 6 tamil, Kathiravan, Vikraman will find this news story useful.