தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் இந்த வாரம் Freeze டாஸ்க் நடந்து முடிந்தது.
Also Read | விக்ரமனை கட்டியணைத்து அசிம் நண்பர் சொன்ன விஷயம்.. உடனே அமுது பண்ணத பாக்கணுமே!!
பிக் பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் வந்து பகிர்ந்து கொண்ட விஷயம், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.
முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், அவர்களுக்காக கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி இருந்தது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள், அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், மணிகண்டா ராஜேஷின் தாய், சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ், மனைவி, குழந்தை உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரரும், ஏடிகே, விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்களும், அசிமின் சகோதரர் மற்றும் நண்பர் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்திருந்தனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி இருந்தனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த வார பிக் பாஸ் எபிசோடுகள் அமோக வரவேற்பையும் பார்வையாளர்கள் மத்தியில் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கதிரவனின் தாயார் ஷிவின் குறித்து பேசிய விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது. கதிரவனின் தாய், தந்தை உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்ததும் சக போட்டியாளர்கள் அனைவரையும் பாராட்டி சிறப்பாக விளையாடி வருவதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர். அதே போல, ஷிவினை கட்டியணைத்து பேசும் கதிரவன் அம்மா, "என்னோட மகள் ஷிவின். அம்மா மிஸ் பண்ணத நெனக்காத. நானும் அம்மா தான்" என பெருமிதத்துடன் குறிப்பிட அதனை மகிழ்ச்சியாகவும் ஷிவின் ஏற்றுக் கொள்கிறார்.
அதே போல, ஒரு டாஸ்க்கின் போது கதிரவன் மற்றும் ஷிவின் ஆகியோர் சகோதரர் மற்றும் சகோதரிகள் போல இருந்ததாக கதிரவனின் தாயார் தெரிவிக்கிறார். இதனைக் கேட்டதும் அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் அப்படி தான் இருப்பதாக அமுதவாணன் கூறுகிறார். தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று அனைத்து போட்டியாளர்களை பற்றி விரிவாக பேசும் போது ஷிவின் பற்றி பேசிய கதிரவனின் தாயார், "ஷிவின் தனக்குன்னு தனி உலகம் மாதிரி இருக்காங்க" என கூறியதும், ஷிவின் பற்றி எல்லாத்தையும் நோட் செய்கிறீர்களா மா என்ற கேள்வியை மைனா நந்தினி முன் வைக்கிறார்.
இதற்கு பதில் சொல்லும் கதிரின் அம்மா, "எல்லத்தையும் நோட் பண்றேன். இது கேமோட ஒரு பகுதி தானே. ஸ்கூல் டாஸ்க்ல கதிர், ஷிவின் ஒரே மாதிரி இருக்கறதா எல்லாரும் சொன்னாங்க" என தெரிவிக்கிறார்.
Also Read | நீங்க நியாயம் ஆனவன் மாதிரியும் மத்தவங்க.. புது ரவுண்டில் அசிம் Vs விக்ரமன்.. மீண்டும் மீண்டுமா?