பிரபல டிவி சேனலில் நேரடியாக ரிலீஸ் ஆகும் கதிர் - சூரியின் அசத்தல் காம்போ படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் சுகுமாரின் மதயானைக்கூட்டம் மூலமாக அறிமுகமானாலும், கிருமி உள்ளிட்ட படங்களில் நடித்த கதிர், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது அழுத்தமான நடிப்பை திரையில் பதித்தார்.

விக்ரம் வேதா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்ற கதிர், விஜய் நடித்த பிகில் திரைப்படத்திலும் முகம் காட்டினார். அவருக்கும் தற்போது ரசிகர்கள் பட்டாளம் வந்துவிட்டது. கதிரின் அடுத்த படம் என்ன என்பது குறித்து அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் கதிர் மற்றும் சூரி இணைந்து நடித்துள்ள கலகலப்பான குடும்பத் திரைப்படமான சர்பத் திரைப்படம் வரும் ஏப்ரல் 11, ஞாயிறு மாலை 4 மணி மற்றும் இரவு 7 மணிக்கு நேரடியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகிறது. 

7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'சர்பத்' படத்தை பிரபாகரன் இயக்கி இருக்கிறார். இதில் கதிருடன் முதல் முறையாக சூரி இணைந்து நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரகசியா, முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து, ஆகியோர் நடித்துள்ளனர்.

அண்மைக்காலமாக திரைப்படங்கள் ஓடிடி மற்றும் டிவிக்களில் நேரடியாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மிக சமீபத்தில் தான் சில்லுக்கருப்பட்டி திரைப்பட இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி, மணிகண்டன் நடித்த ஏலே திரைப்படம் விஜய் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆனது.

ALSO READ: 'கெட்ட வார்த்தையே கத்து தர மாட்றாங்க'.. நீங்க சிங்கிளா? - பிரியங்கா - சூர்யா ஜாலி பேட்டி!

தொடர்புடைய இணைப்புகள்

Kathir Soori Sarbath Colors Tamil Release சர்பத் கதிர் சூரி

People looking for online information on Kathir, Sarbath, Soori will find this news story useful.